இந்தியா

கேரளாவில் முதல்-மந்திரி பாதுகாப்புக்காக ரூ.33 லட்சத்தில் புதிய கார் வாங்க திட்டம்

Update: 2022-06-26 08:54 GMT
  • பினராயி விஜயன் கான்வாய்க்கு புதிய கார் வாங்க, ரூ.33 லட்சம் செலவிட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
  • கேரளாவில் நிதி நெருக்கடி உள்ள நிலையில் முதல்வர் பாதுகாப்புக்கு ரூ.33 லட்சத்தில் கார் வாங்கப்படுவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

திருவனந்தபுரம்:

கேரளாவில் முதல்-மந்திரியாக இருப்பவர் பினராயி விஜயன். இவருக்கு அச்சுறுத்தல் இருப்பதை முன்னிட்டு பாதுகாப்பை பலப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

மாநில காவல்துறைத் தலைவர் அனில்காந்த், முதல்வரின் வாகனத்தில் புதிய காரை சேர்க்க வேண்டும் என்று ஏற்கனவே பரிந்துரை செய்திருந்தார். இதையடுத்து கடந்த 24ம் தேதி உள்துறை செயலர் அதற்கான உத்தரவு பிறப்பித்தார்.

இதனைத் தொடர்ந்து பினராயி விஜயன் கான்வாய்க்கு புதிய கார் வாங்க, ரூ.33 லட்சம் செலவிட முடிவு செய்யப்பட்டு உள்ளது. 6 மாதங்களுக்கு முன்பு புதிய கருப்பு நிற இன்னோவா கிரிஸ்டா கார்களை அரசு வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் நிதி நெருக்கடி உள்ள நிலையில் முதல்வர் பாதுகாப்புக்கு ரூ.33 லட்சத்தில் கார் வாங்கப்படுவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

ஜனவரியில், டாடா ஹாரியர் மற்றும் மூன்று இன்னோவா கிரிஸ்டா கார்களை முதல்வர் கான்வாய்க்கு வாங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும், இந்த ஆர்டர் புதுப்பிக்கப்பட்டு, ஹாரியருக்குப் பதிலாக கார்னிவல் லிமோசின் மாடல் காரை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News