இந்தியா

(கோப்பு படம்)

சபரிமலையில் 12 நாட்களில் ரூ.52.55 கோடி வருமானம்

Published On 2022-11-27 20:36 GMT   |   Update On 2022-11-27 20:36 GMT
  • 30-ந் தேதி வரை 8 லட்சத்து 79 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு.
  • நவம்பர் இறுதிக்குள் 10 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ய வாய்ப்பு.

சபரிமலை தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மண்டல,மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட 12 நாட்களில் மட்டும் சபரிமலையில் ரூ.52.55 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

அப்பம் மூலம் ரூ.2.58 கோடியும், அரவணை மூலம் ரூ.23.57 கோடியும், காணிக்கையாக ரூ.12.73 கோடியும் கிடைத்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் அனந்த கோபன் தெரிவித்துள்ளார். வருகிற 30-ந் தேதி வரை சபரிமலை தரிசனத்திற்கு 8 லட்சத்து 79 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடி முன்பதிவையும் சேர்த்தால் நவம்பர் மாத இறுதிக்குள் 10 லட்சம் பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

Similar News