இந்தியா

பெங்களூருவில் 2 நாட்கள் நடந்த பிரதமர் மோடி ஊர்வலத்திற்காக ரூ.1.60 கோடி செலவு?

Published On 2023-05-08 08:52 IST   |   Update On 2023-05-08 13:06:00 IST
  • பிரதமர் மோடி 32 கிலோ மீட்டர் தூரம் திறந்த காரில் ஊர்வலம் சென்றிருந்தார்.
  • 2 நாட்கள் பெங்களூருவில் பிரதமர் மோடி ஊர்வலம் நடத்தி இருந்தார்.

பெங்களூரு :

கர்நாடக சட்டசபை தேர்தலில் 2 நாட்கள் பெங்களூருவில் பிரதமர் மோடி ஊர்வலம் நடத்தி இருந்தார். குறிப்பாக 32 கிலோ மீட்டர் தூரம் அவர் திறந்த காரில் ஊர்வலம் சென்றிருந்தார். அவர் செல்லும் பாதை முழுவதும் இருபுறங்களிலும் பாதுகாப்பாக இரும்பு தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு இருந்தது. அதற்கு மேல் காவி துணிகள் கட்டப்பட்டு, கொடிகளாக பறந்தது.

இந்த நிலையில், பிரதமர் மோடியின் 2 நாட்கள் பிரசாரத்திற்காக சராசரியாக ரூ.1.60 கோடி செலவாகி இருக்கலாம் என்று பா.ஜனதா பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதாவது ஒரு கிலோ மீட்டருக்கு இரும்பு தடுப்புகள், கொடிகள், பூக்களுக்கு மட்டும் ரூ.5 லட்சத்திற்கு மேல் செலவாவதாகவும், ஒட்டு மொத்தமாக ரூ.1.60 கோடி செலவாகி இருக்கலாம் என்றும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.

இது வேட்பாளர்கள் மற்றும் பா.ஜனதா கட்சியின் செலவாக தேர்தல் ஆணையம் எடுத்து கொள்ளலாம், அந்தந்த பகுதியில் இருக்கும் பா.ஜனதா பிரமுகர்களுக்கான செலவாகவே பார்க்கப்படுகிறது.

பொதுக்கூட்டங்களில் தன்னை தூரத்தில் இருந்து தான் மக்கள் பார்ப்பதால், ஊர்வலத்தின் மீது தன்னை அருகில் இருந்து மக்கள் பார்ப்பார்கள் என்பதால், பிரதமர் மோடியின் ஊர்வலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக அந்த பிரமுகர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News