இந்தியா

பிரதமரின் சொல்லுக்கும், செயலுக்கும் உள்ள மாறுபாட்டை நாடே பார்க்கிறது- ராகுல் காந்தி

Published On 2022-08-18 03:00 GMT   |   Update On 2022-08-18 10:32 GMT
  • பெண் சக்தி பற்றி பொய் பேசுகிறவர்களால், நாட்டின் பெண்களுக்கு என்ன செய்தி விடுக்கப்படுகிறது?
  • பிரதமர் வார்த்தைகளுக்கும், செயல்களுக்கும் இடையே உள்ள மாறுபாட்டை ஒட்டுமொத்த நாடும் பார்த்துக்கொண்டிருக்கிறது.

புதுடெல்லி:

குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடந்த கோத்ரா ரெயில் எரிப்புச்சம்பவத்தைத் தொடர்ந்து பெருமளவில் வன்முறைச்சம்பவங்கள் அரங்கேறின. அதில், பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி பெண் ஒரு கும்பலால் கற்பழிக்கப்பட்டதும், அவரது குடும்ப உறுப்பினர்கள் 7 பேர் படுகொலை செய்யப்பட்டதும் அடங்கும். இந்த கொடூரச்செயல்களை செய்த குற்றவாளிகள் 11 பேருக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களின் தண்டனைக்காலத்தைக் குறைத்து குஜராத் மாநில அரசு அவர்களை விடுவித்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதையொட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

5 மாத கர்ப்பிணியை கற்பழித்து, அவரது 3 வயது குழந்தையை கொலை செய்தவர்கள் சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவின்போது சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்கள். பெண் சக்தி பற்றி பொய் பேசுகிறவர்களால், இந்த நாட்டின் பெண்களுக்கு என்ன செய்தி விடுக்கப்படுகிறது?

பிரதமர் அவர்களே, உங்கள் வார்த்தைகளுக்கும், செயல்களுக்கும் இடையே உள்ள மாறுபாட்டை ஒட்டுமொத்த நாடும் பார்த்துக்கொண்டிருக்கிறது.

இவ்வாறு அதில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News