இந்தியா

ராகுல் காந்தி

ஒவ்வொரு அநீதியையும் எதிர்த்து இந்திய ஒற்றுமை பயண யாத்திரை நடைபெறுகிறது- ராகுல் காந்தி

Update: 2022-09-26 19:22 GMT
  • சில பணக்கார தொழில் அதிபர்களின் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்கிறது.
  • சிறு கடனை திருப்பி செலுத்தாத விவசாயி சிறையில் அடைக்கப்படுகிறார்.

பாலக்காடு:

இந்திய ஒற்றுமை பயண யாத்திரை மேற்கொணடு வரும் காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி கேரள மாநிலம் கொப்பத்தில் நேற்று மாலை திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

மத்திய பாஜக அரசு ஒரு சில பணக்கார தொழில் அதிபர்களின் கடன்களைத் தள்ளுபடி செய்வதன் மூலம் அவர்களுக்கு சாதகமாக நடந்து கொள்கிறது. அதே நேரத்தில் விவசாயிகள், சிறு வணிகர்கள் மற்றும் பிறரிடம் அதே அக்கறை காட்டப்படவில்லை.  எரிவாயு சிலிண்டர்களை வாங்கும் போதோ, வாகனங்களில் எரிபொருள் நிரப்பும் போதோ, கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டது குறித்து மக்கள் கேள்வி கேட்க வேண்டும். அந்த பணம் மறைவதில்லை, நாட்டின் ஐந்தாறு பணக்கார தொழிலதிபர்களின் பாக்கெட்டுகளுக்கு அது போகிறது. இந்த அநியாயத்தை நாங்கள் ஏற்க மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பின்னர் தமது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், இன்று பெரிய தொழிலதிபர்களின் கோடிக்கணக்கான கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. ஆனால், ஒரு விவசாயி அல்லது சிறு வியாபாரி சிறு கடனைக் கூட திருப்பிச் செலுத்த முடியாமல் போனால், அவரை பிடித்து சிறையில் அடைக்கிறார்கள். கடனை செலுத்தாதவர் என்று அவரை கூறுகிறார்கள். இது போன்ற ஒவ்வொரு அநீதியையும் எதிர்த்து, இந்திய ஒற்றுமை பயணம் நடைபெறுகிறது. மன்னரின் (பிரதமர் மோடியின்) இது போன்ற இரண்டு இந்துஸ்தான் கொள்கையை நாடு ஏற்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News