இந்தியா
வாக்கு திருட்டுக்கு எதிராக பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும்- ராகுல்காந்தி அழைப்பு
- வாக்கு திருட்டு என்பது ஒரு நபர், ஒரு வாக்கு என்ற ஜனநாயகத்தின் அடிப்படை கொள்கையை தாக்கும் செயலாகும்.
- போராட்டம் நமது ஜனநாயகத்தை காப்பதற்கானது. நமது வாக்குரிமையை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்.
புதுடெல்லி:
வாக்கு திருட்டுக்கு எதிராக பொதுமக்கள் ஆதரவு தருமாறு காங்கிரஸ் பிரசாரத்தை தொடங்கியுள்ளது. இது தொடர்பாக ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
வாக்கு திருட்டு என்பது ஒரு நபர், ஒரு வாக்கு என்ற ஜனநாயகத்தின் அடிப்படை கொள்கையை தாக்கும் செயலாகும். சுதந்திரமான, நியாயமான தேர்தல்களுக்கு வெளிப்படையான வாக்காளர் பட்டியல் அவசியம். எனவே பொதுமக்கள் வாக்கு திருட்டுக்கு எதிராக தங்கள் ஆதரவை http://votechori.in/ecdemand என்ற இணையதளத்தில் பதிவு செய்தும், 96500 03420 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தும் தெரிவிக்கலாம். இந்தப் போராட்டம் நமது ஜனநாயகத்தை காப்பதற்கானது. நமது வாக்குரிமையை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்.
இவ்வாறு அந்த பதிவில் ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார்.