இந்தியா

ஜனாதிபதி திரவுபதி முர்மு

இமாசலப் பிரதேசத்தில் வாகனம் கவிழ்ந்து 7 பேர் பலி - ஜனாதிபதி இரங்கல்

Published On 2022-09-26 14:34 GMT   |   Update On 2022-09-26 14:34 GMT
  • இமாசலப் பிரதேசத்தில் சுற்றுலா பயணிகள் வாகனம் கவிழ்ந்து 7 பேர் உயிரிழந்தனர்.
  • வாகன விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ஜனாதிபதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

இமாசல பிரதேசம் மாநிலம் குல்லு மாவட்டத்தின் பஞ்சார் பள்ளத்தாக்கின் கியாகி பகுதியில் நேற்று இரவு சுற்றுலா வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர், மேலும் 10 பேர் காயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்து போலீசார், ஊர்க்காவல்படையினர் மற்றும் உள்ளூர் நிர்வாகக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில, இமாசல பிரதேசத்தில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், இமாசலப் பிரதேச மாநிலம் குலுவில் நடந்த சாலை விபத்தில் 7 பேர் உயிரிழந்த செய்தி எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News