இந்தியா

ஜனாதிபதி திரவுபதி முர்மு

75வது சுதந்திர தினவிழா - ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு இன்று மாலை உரை

Update: 2022-08-13 22:01 GMT
  • சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
  • ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு ஆற்றும் முதல் உரை இது என்பது குறிப்பிடத்தக்கது.

புதுடெல்லி:

சமீபத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற திரவுபதி முர்மு கடந்த மாதம் 25-ம் தேதி ஜனாதிபதியாக பதவியேற்றார்.

இந்நிலையில், நாட்டின் 75-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் நாட்டு மக்களுக்கு முர்மு இன்று மாலை 7 மணிக்கு உரையாற்ற உள்ளார். தூர்தர்ஷனில் இது நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது. அகில இந்திய வானொலியும் ஒலிபரப்புகிறது. அதன் பிறகு, இரவு 9 மணிக்கு அந்தந்த மாநில மொழிகளில் இவருடைய உரை மொழி மாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுகிறது.

ஜனாதிபதியாக முர்மு பதவியேற்ற பிறகு, நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றும் முதல் உரை இது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News