இந்தியா

கேரளாவில் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பஞ்சாயத்து அலுவலகங்கள் இயங்கின

Update: 2022-07-03 10:39 GMT
  • கேரளாவில் ஏராளமான கோப்புகள் நிலுவையில் உள்ளன.
  • பஞ்சாயத்து இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் அலுவலகங்களும் வழக்கம் போல் செயல்படும்.

திருவனந்தபுரம்:

கேரளாவில் அனைத்து கிராம பஞ்சாயத்து அலுவலர்களும் ஞாயிற்றுக்கிழமைகளில் பணிக்கு வர வேண்டும் என மாநில மந்திரி கோவிந்தன் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கேரளாவில் ஏராளமான கோப்புகள் நிலுவையில் உள்ளன. இதற்கு தீர்வு காண, மாநிலத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்து அலுவலகங்களும் இன்று (3-ந்தேதி) முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படும். அனைத்து ஊழியர்களும் பணிக்கு வர வேண்டும்.

மேலும், பஞ்சாயத்து இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் அலுவலகங்களும் வழக்கம் போல் செயல்படும். இருப்பினும், பொதுமக்களால் வழக்கமான சேவைகளைப் பெற முடியவில்லை.

செப்டம்பர் 30-ந் தேதி வரை கோப்பு தீர்வை முடிக்க பணியாளர்கள் பணிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News