இந்தியா

நித்யானந்தா

மத்திய ஆப்பிரிக்கா நாட்டுடன் கைகோர்க்கும் நித்யானந்தா- கைலாசா பற்றிய புதிய தகவல்கள்

Published On 2022-06-26 07:25 GMT   |   Update On 2022-06-26 07:25 GMT
  • கைலாசாவுக்கு வர விரும்புபவர்கள் ஆஸ்திரேலியா வரை வந்தால் அங்கிருந்து இலவசமாக கைலாசாவிற்கு அழைத்து செல்லப்படுவார்கள் எனவும் நித்யானந்தா கூறி இருந்தார்.
  • கானாவில் ஏராளமான பழங்குடிகள் வசித்து வருகின்றனர்.

இந்தியாவில் இருந்து 4 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடு தப்பி ஓடிய நித்யானந்தா கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி உள்ளதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

சர்வதேச போலீசார் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்து அவரை தேடுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் நித்யானந்தா சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து பக்தர்கள் மத்தியில் உரையாற்றி வந்தார்.

அவர் ஆஸ்திரேலியா அருகே ஒரு குட்டி தீவை விலைக்கு வாங்கி அதற்கு கைலாசா என பெயர் சூட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதை உறுதிபடுத்தும் வகையில், கைலாசாவுக்கு வர விரும்புபவர்கள் ஆஸ்திரேலியா வரை வந்தால் அங்கிருந்து இலவசமாக கைலாசாவிற்கு அழைத்து செல்லப்படுவார்கள் எனவும் நித்யானந்தா கூறி இருந்தார்.

இந்நிலையில் தற்போது அவரது உடல்நிலை குறித்து பல்வேறு சர்ச்சையான தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், மத்திய ஆப்பிரிக்கா நாடான கானாவில் உள்ள எப்புடு என்ற மாவட்டத்துடன் இரு நாட்டு உறவை மேம்படுத்துவதற்கான தொடக்க நிலையில் இருப்பதாக கைலாசா அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக கைலாசா நாட்டின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-

பழமையான கலாச்சாரம், இந்துக்களுக்கான முதல் நாடான கைலாசாவுடன் இரு தரப்பு உறவுகளில் மேம்படுத்துவது, கலாச்சார புரிதல், மத சுதந்திரம் மற்றும் பிற உரிமைகள், பசியை ஒழித்தல், இளைஞர்களுக்கான தலைமை, கல்வி, கல்வி உரிமை பரிமாற்றம், சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு உள்ளிட்ட உறவுகளின் கீழ் கானாவில் உள்ள எப்புடு மாவட்டத்துடன் தொடக்க உறவில் இருக்கிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது.

கானாவில் ஏராளமான பழங்குடிகள் வசித்து வருகின்றனர். எப்புடு மாவட்டம் கானாவின் மத்திய பிராந்தியத்தில் உள்ள 22 மாவட்டங்களில் ஒன்றாகும். முதலில் இது 1988-ல் அப்போதைய பெரிய எப்புடு மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் 2008-ம் ஆண்டு பிரிக்கப்பட்டு முனிசிபல் மாவட்ட சட்டமன்ற அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டது.

இதன் நகராட்சி மத்திய பிராந்தியத்தின் தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.

Tags:    

Similar News