இந்தியா

தமிழ்நாட்டின் பாரம்பரிய தானியங்களை பிரதமர் மோடிக்கு வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2022-08-17 15:17 GMT   |   Update On 2022-08-17 15:17 GMT
  • ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிரதமரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.
  • தமிழகத்தில் உள்ள மரபு தானியங்களின் தொகுப்பு அடங்கிய பெட்டகத்தை வழங்கினார்.

புதுடெல்லி:

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் உள்ள மரபு தானியங்களின் தொகுப்பு அடங்கிய பெட்டகத்தை வழங்கினார்.

மரபு தானியங்களான மாப்பிள்ளை சம்பா, குள்ளக்கார், கருப்புக் கவுனி, சீரகச் சம்பா, குடவாழை ஆகிய அரிசி வகைகள் மற்றும் அருந்தானியங்களான கம்பு, வரகு, சாமை, தினை, கேழ்வரகு ஆகியவற்றின் தொகுப்பை முதல்வர் பரிசாக அளித்தார்.


Tags:    

Similar News