இந்தியா

விழிஞ்ஞம் போராட்ட விவகாரம்: கேரள முதல் மந்திரி - கத்தோலிக்க கர்தினால் ஆலோசனை

Published On 2022-12-04 11:05 GMT   |   Update On 2022-12-04 11:05 GMT
  • விழிஞ்ஞம் போராட்டத்தில் ஈடுபட்ட பாதிரியார்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
  • போராட்டத்தை கட்டுப்படுத்த மத்திய பாதுகாப்பு படையை விழிஞ்ஞத்தில் நிறுத்த மாநில அரசு ஒப்புக்கொண்டது.

திருவனந்தபுரம்:

கேரளாவில் திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்ஞத்தில் தனியார் துறைமுகம் அமைக்கப்பட்டு வருகிறது.

இத்துறைமுகம் அமைவதால் கடற்கரை கிராமங்கள் பாதிக்கப்படும் என்று கூறி மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மேலும் போலீஸ் நிலையம் சூறையாடப்பட்டதுடன், வாகனங்களும் தீவைத்து எரிக்கப்பட்டன.

இதையடுத்து விழிஞ்ஞம் போராட்டத்தில் ஈடுபட்ட பாதிரியார்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதற்கிடையே போராட்டத்தை கட்டுப்படுத்த மத்திய பாதுகாப்பு படையை விழிஞ்ஞத்தில் நிறுத்த மாநில அரசு ஒப்புக்கொண்டது.

இந்நிலையில் விழிஞ்ஞம் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், கத்தோலிக்க கர்தினால் கிளிமிஸ் பாவாவை நேற்று சந்தித்து பேசினார்.

இருவரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி ஆலோசனை நடத்தினர். முன்னதாக கேரள தலைமை செயலாளர் வி.பி.ஜாயூம் கர்தினால் மற்றும் பேராயர் ஆகியோரை சந்தித்து பேசினார்.

Tags:    

Similar News