இந்தியா

தீப்பிடித்த விமானம்

டெல்லியில் இருந்து பெங்களூரு புறப்பட்ட விமானம் தீப்பிடித்ததால் அவசரமாக தரையிறக்கம்

Published On 2022-10-28 23:19 IST   |   Update On 2022-10-28 23:24:00 IST
  • ஓடுபாதையில் விமானம் சென்றபோது தீப்பொறிகள் வெளிப்பட்டது.
  • விமான பயணிகள் பத்திரமாக இருப்பதாக தகவல்.

டெல்லி விமான நிலையத்தில் இருந்து பெங்களூருவுக்கு இரவு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் (6E-2131)எஞ்சின் பகுதியில் தீப் பொறி பறந்ததால் மீண்டும் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதையடுத்து விமான நிலையத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

எனினும் பயணிகள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக கூறப்படுகிறது. விமானம் வானில் பறப்பதற்காக ஓடுபாதையில் சென்றபோது தீப்பொறிகள் வெளிப்படும் வீடியோ ஒன்றை அந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இது சமூக வளைதளத்தில் வைரலானது. முன்னதாக வியாழன் அன்று, டெல்லிக்கு புறப்பட்ட மற்றொரு விமானம் மீது பறவை மோதியது, இதன் காரணமாக அந்த விமானம் இஞ்ஜின் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News