இந்தியா

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 3 ஆயிரமாக சரிவு

Update: 2022-10-03 07:20 GMT
  • கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 4,301 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.
  • கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்து 32 ஆயிரத்து 671 ஆக அதிகரித்துள்ளது.

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,011 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 45 லட்சத்து 97 ஆயிரத்து 498 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 4,301 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்து 32 ஆயிரத்து 671 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 36,126 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 1,318 குறைவு ஆகும்.

கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் 28 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் விடுபட்ட மரணங்கள் 20 இன்றைய பட்டியலில் சேர்க்கப்பட்டதும் அடங்கும். மொத்த பலி எண்ணிக்கை 5,28,701 ஆக அதிகரித்துள்ளது.

Tags:    

Similar News