இந்தியா

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 165 ஆக குறைந்தது

Published On 2022-12-06 06:57 GMT   |   Update On 2022-12-06 06:57 GMT
  • கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 38 ஆயிரத்து 805 ஆக உயர்ந்துள்ளது.
  • கொரோனா தொற்று காரணமாக தற்போது 4,345 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு கடந்த சில நாட்களாக 300-க்கும் கீழ் குறைந்துள்ளது. இந்நிலையில் புதிய பாதிப்பு 165-ஆக சரிந்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 73 ஆயிரத்து 783 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து 251 பேர் நலம் பெற்றுள்ளனர்.

இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 38 ஆயிரத்து 805 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 4,345 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 89 குறைவாகும். தொற்று பாதிப்பால் நேற்று டெல்லியில் ஒருவர் இறந்துள்ளார். கேரளாவில் விடுபட்ட பலிகளில் 2-யை கணக்கில் சேர்த்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,633 ஆக உயர்ந்துள்ளது.

இத்தகவல்களை மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

Tags:    

Similar News