இந்தியா

பிரபல தொழில் அதிபர் கவுதம் அதானிக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு

Published On 2022-08-18 03:15 GMT   |   Update On 2022-08-18 06:34 GMT
  • இந்த பாதுகாப்புக்கு இவர் மாதம் ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை செலுத்த வேண்டியிருக்கும்.
  • முகேஷ் அம்பானிக்கு மத்திய அரசு கடந்த 2013-ம் ஆண்டு 'இசட் பிளஸ்' பிரிவு பாதுகாப்பு வழங்கியது.

புதுடெல்லி :

பிரபல தொழிலதிபரும், அதானி குழும தலைவருமான கவுதம் அதானிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய பாதுகாப்பு அமைப்புகள் அறிக்கை தயாரித்துள்ளன.

அதன் அடிப்படையில் கவுதம் அதானிக்கு 'இசட்' பிரிவு வி.ஐ.பி. பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்தது.

அவருக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்) கமாண்டோக்களின் பாதுகாப்பை அளிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, கவுதம் அதானிக்கு கமாண்டோக்கள் பாதுகாப்பு அளித்துவருகின்றனர். அகில இந்திய அளவிலான இந்த பாதுகாப்புக்கு கவுதம் அதானி மாதம் ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை செலுத்த வேண்டியிருக்கும்.

ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானிக்கு கடந்த 2013-ம் ஆண்டு 'இசட் பிளஸ்' பிரிவு பாதுகாப்பையும், சில ஆண்டுகள் கழித்து அவரது மனைவி நீதா அம்பானிக்கு குறைந்த பிரிவு பாதுகாப்பையும் மத்திய அரசு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News