இந்தியா

குழிக்குள் சிறுத்தை, காட்டு பன்றியை காணலாம்

காட்டு பன்றியை விரட்டி சென்றபோது 10 அடி ஆழ குழிக்குள் விழுந்த சிறுத்தை

Published On 2022-06-29 05:41 GMT   |   Update On 2022-06-29 05:41 GMT
  • காட்டுப்பகுதிக்கு சென்ற மின் ஊழியர்கள் அங்கிருந்த 10 அடி ஆழ குழிக்குள் இருந்து சிறுத்தையின் உறுமல் ஓசையை கேட்டனர்.
  • குழிக்குள் சென்று பார்த்தபோது அங்கு ஒரு சிறுத்தையும் 4 காட்டுபன்றிகளும் விழுந்து கிடப்பதை கண்டனர்.

திருவனந்தபுரம்:

கேரளாவின் மலப்புரம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் இருந்து விலங்குகள் கிராமத்திற்குள் நுழையாமல் இருக்க சூரிய மின்வேலி அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இதற்காக காட்டுப்பகுதிக்கு சென்ற மின் ஊழியர்கள் அங்கிருந்த 10 அடி ஆழ குழிக்குள் இருந்து சிறுத்தையின் உறுமல் ஓசையை கேட்டனர்.

அதிர்ச்சி அடைந்த அவர்கள் குழிக்குள் சென்று பார்த்தபோது அங்கு ஒரு சிறுத்தையும் 4 காட்டுபன்றிகளும் விழுந்து கிடப்பதை கண்டனர்.

உடனே அவர்கள் இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து குழிக்குள் கிடந்த சிறுத்தை மற்றும் காட்டு பன்றியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்காக விசேஷ ஏணி கொண்டு வரப்பட்டு குழிக்குள் போடப்பட்டது. அந்த ஏணி வழியாக சிறுத்தை வெளியே வந்தது. வன ஊழியர்கள் அதனை காட்டுக்குள் அனுப்பினர். இதுபோல காட்டு பன்றிகளும் குழிக்குள் இருந்து மீட்கப்பட்டன.

காட்டுக்குள் காட்டு பன்றியை வேட்டையாட விரட்டி சென்றபோது சிறுத்தை குழிக்குள் விழுந்தது தெரியவந்தது.

Tags:    

Similar News