இந்தியா

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தினசரி பாதிப்பு 16,103 ஆக குறைந்தது

Update: 2022-07-03 05:00 GMT
  • நாடு முழுவதும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டேதான் உள்ளது.
  • கொரோனாவுக்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 199 ஆக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை பரிசோதனையை பொறுத்து ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது.

நேற்று முன்தினம் 17,070 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியானது. நேற்று 17,092 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்தது.

இந்த நிலையில் இன்று (நேற்று) இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. பரிசோதனை குறைந்ததால் இன்று காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 16,103 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் 13,929 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். என்றாலும், நாடு முழுவதும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டேதான் உள்ளது.

இன்று காலை நிலவரப்படி இந்தியா முழுவதும் 1 லட்சத்து 11 ஆயிரத்து 711 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 90 சதவீதம் பேர் சாதாரண அறிகுறிகளுடன் இருப்பதால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி 31 பேர் பலியானதாக தெரிய வந்துள்ளது. இதனால் இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 199 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது இந்தியாவில் பரவி வரும் கொரோனா தாக்கத்துக்கு 99 சதவீதம் ஒமைக்ரான் பி.ஏ.-4 மற்றும் பி.ஏ.-5 ரக வைரஸ்கள்தான் காரணம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இதைத்தடுக்க தடுப்பூசி அவசியம் போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டால்தான் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்திக்கொள்ள முமடியும் என்று மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி கூறி வருகிறார்கள்.

Tags:    

Similar News