இந்தியா

புதிதாக 15,940 பேருக்கு கொரோனா தொற்று- சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 91,779 ஆக உயர்வு

Update: 2022-06-25 04:11 GMT
  • அரியானாவில் 651, உத்தரபிரதேசத்தில் 620, தெலுங்கானாவில் 493, குஜராத்தில் 380 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
  • நாடு முழுவதும் நேற்று 15,73,341 டோஸ்களும், இதுவரை 196 கோடியே 94 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா தொற்றால் நேற்று 17,336 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், புதிதாக 15,940 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்ரத்தில் 4,205, கேரளாவில் 3,981 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 1,447, தமிழ்நாட்டில் 1,359, கர்நாடகாவில் 816, மேற்கு வங்கத்தில் 657, அரியானாவில் 651, உத்தரபிரதேசத்தில் 620, தெலுங்கானாவில் 493, குஜராத்தில் 380 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 33 லட்சத்து 78 ஆயிரத்து 234 ஆக உயர்ந்தது.

தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 12,425 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 27 லட்சத்து 61 ஆயிரத்து 481 ஆக உயர்ந்தது.

தற்போது 91,779 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 3,495 அதிகம் ஆகும்.

தொற்று பாதிப்பால் மேலும் 20 பேர் பலியாகி உள்ளனர். இதில் கேரளாவில் திருத்தப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்ட 11 மரணங்கள் அடங்கும். இதுதவிர நேற்று மகாராஷ்ரத்தில் 3, மேற்கு வங்கத்தில் 2, டெல்லி, ராஜஸ்தான், பீகார், பஞ்சாபில் தலா ஒருவர் இறந்துள்ளனர்.

இதுவரை தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,24,974 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் நேற்று 15,73,341 டோஸ்களும், இதுவரை 196 கோடியே 94 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி 86.02 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று 3,63,103 மாதிரிகள் அடங்கும்.

Tags:    

Similar News