இந்தியா

பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம்- டெல்லி அரசு அறிவிப்பு

Update: 2022-08-11 11:07 GMT
  • கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தடுக்க டெல்லி அரசு நடவடிக்கை
  • பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி:

நாட்டில் இதுவரை 4 கோடியே 42 லட்சத்து 6 ஆயிரம் 996 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் மட்டும் இன்று சுகாதாரத்துறை அறிக்கையின்படி, 2,146 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. தினந்தோறும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தடுக்க டெல்லி அரசு, மக்களின் நலனைக் கருதி பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதை மீறினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் கீழ் உள்ள அபராதம், தனியார் நான்கு சக்கர வாகனங்களில் ஒன்றாக பயணிக்கும் நபர்களுக்கு பொருந்தாது.

பொது இடங்களில் மக்கள் மிகவும் அஜாக்கிரதையாக, முககவசம் அணியாமல் நடமாடுவதை கவனித்த டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம், இந்த முடிவை எடுத்துள்ளது.

Similar News