இந்தியா

குடோனில் இருந்து ரூ.17 லட்சம் மதிப்பிலான சாக்லேட் பார்களை திருடிய கும்பல்

Published On 2022-08-17 11:45 GMT   |   Update On 2022-08-17 11:45 GMT
  • சாக்லேட்டுகளை சேமித்து வைப்பதற்காக வீட்டை குடோனாக பயன்படுத்தி வந்துள்ளனர்.
  • ஏதாவது துப்பு கிடைத்தால் உடனடியாக தெரிவிக்கும்படி விநியோகஸ்தர் கேட்டுக்கொண்டுள்ளார்.

லக்னோ:

உத்திரபிரதேச மாநிலம், லக்னோ அருகே சின்ஹட் பகுதியில் சாக்லேட் குடோன் உள்ளது. ஒரு வீட்டை குடோனாக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் அந்த குடோனில் இருந்து ரூ.17 லட்சம் மதிப்பிலான கேட்பரி சாக்லேட் பார்கள் திருடப்பட்டுள்ளன.

இது தொடர்பாக சாக்லேட் நிறுவனத்தின் விநியோகஸ்தர் ராஜேந்திர சிங் சித்து அளித்த புகாரின் அடிப்படையில், சின்ஹட் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். ஏதாவது துப்பு கிடைத்தால் உடனடியாக தெரிவிக்கும்படி விநியோகஸ்தர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சாக்லேட்டுகளை சேமித்து வைப்பதற்காக வீட்டை குடோனாக பயன்படுத்தி வருவதாகவும், செவ்வாய்க்கிழமை காலையில் பக்கத்து வீட்டுக்காரர் தொடர்பு கொண்டு கதவு உடைக்கப்பட்ட தகவலை தெரிவித்ததாகவும் விநியோகஸ்தர் தனது புகார் மனுவில் கூறி உள்ளார்.

திருடர்கள் குடோனை காலி செய்ததுடன், டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் மற்றும் சிசிடிவி கேமரா தொடர்பான உபகரணங்களை எடுத்து சென்றுவிட்டதாகவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

குடோனில் உள்ள சிசிடிவி பதிவு கிடைக்காததால், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள மற்ற சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்கின்றனர்.

Tags:    

Similar News