இந்தியா

பழங்குடியின பெண் ஜனாதிபதி ஆவதை சித்தராமையாவால் சகிக்க முடியாதது ஏன்?: பா.ஜனதா கேள்வி

Update: 2022-06-25 02:27 GMT
  • ஜனாதிபதியை தனது சொல்படி பாஜக வைத்து கொள்வதாக காங்கிரஸ் சொல்கிறது.
  • காங்கிரஸ் கட்சிக்கு பெண்களை முன்னேற்றம் உறுதிப்பாடு இல்லை.

பெங்களூரு:

கர்நாடக பா.ஜனதா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

ஜனாதிபதி பதவிக்கு பா.ஜனதா சார்பில் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த திரவுபதி முர்மு நிறுத்தப்படுகிறார். இது சமூகநீதி அல்ல என்று சித்தராமையா கூறியுள்ளார். காந்தி குடும்பத்தின் சேவராக உள்ள சித்தராமையா, அந்த குடும்பத்தின் கவனத்தை ஈர்ப்பதே சித்தராமையா வாழ்க்கையின் ஒரு பாகமாக மாறிவிட்டது.

ஆதிவாசி சமூக பெண் ஒருவர் ஜனாதிபதி ஆவதை அவரால் சகித்து கொள்ள முடியாதது ஏன். தேவராஸ் அர்ஸ் போல் பணியாற்ற உங்களால் முடியுமா?. நாட்டில் இந்திரா காந்தி அவசர நிலையை அறிவித்தபோது, ஜனாதிபதி என்ன செய்தார் என்பதை சற்று நினைவுபடுத்தி கொள்ளுங்கள்.

ஜனாதிபதியை தனது சொல்படி பா.ஜனதா வைத்து கொள்வதாக காங்கிரஸ் சொல்கிறது. காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் அனைவரும் காந்தி குடும்பம் சொல்படி தானே நடந்து கொள்கிறார்கள். பா.ஜனதா ஆட்சியில் முஸ்லிம், தலித் சமூகங்களை சேர்ந்தவர்களை ஜனாதிபதி ஆக்கினோம். தற்போது பழங்குடியின பெண்ணை ஜனாதிபதி தலைவராக ஆக்குகிறோம்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அந்த சமூகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதா?. காங்கிரஸ் கட்சிக்கு பெண்களை முன்னேற்றம் உறுதிப்பாடு இல்லை.

இவ்வாறு பா.ஜனதா குறிப்பிட்டுள்ளது.

Tags:    

Similar News