தெருநாய்கள் விவகாரம்: மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் நாளை விசாரிக்கிறது..!
- டெல்லி NCR-ல் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து காப்பகத்தில் அடைக்க உத்தரவு.
- இடையூறு செய்யும் தனிநபர்கள், விலங்கு ஆர்வலர்கள் அல்லது அமைப்புகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.
டெல்லியில் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) சுற்றித்திரியும் அனைத்து தெருநாய்களையும் எட்டு வாரங்களுக்குள் பிடித்து காப்பகங்களில் அடைத்துப் பராமரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு நாய்கூட தெருக்களில் விடப்படக்கூடாது என்பதை உறுதி செய்யுமாறு டெல்லி அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகங்களுக்குக் கடுமையாக அறிவுறுத்தியுள்ள நீதிமன்றம், இந்த நடவடிக்கைக்கு இடையூறு செய்யும் தனிநபர்கள், விலங்கு ஆர்வலர்கள் அல்லது அமைப்புகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் கொண்ட பெஞ்ச் கடந்த திங்கட்கிழமை இந்த உத்தரவை பிறப்பித்திருந்தது. இதற்கு பல்வேறு ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன் நேற்று முறையீடு செய்யப்பட்டது. இது குறித்து கவனிக்கப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நாளை நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேக்தா, என்.வி. அஞ்சாரியா கொண்ட பெஞ்ச் தெருநாய்கள் தொடர்பான வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் எனத் தெரிவித்துள்ளார்.