இந்தியா

ஏக்நாத் ஷிண்டே துரோகம் செய்து விட்டார்: ஆதித்ய தாக்கரே

Update: 2022-06-25 01:53 GMT
  • பதவிக்காக அரசியலில் துரோகம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது.
  • கடந்த 2½ ஆண்டாக உத்தவ்தாக்கரே கடும் உழைப்பை வழங்கி உள்ளார்.

மும்பை :

மகாராஷ்டிரா மாநில சுற்றுலாத்துறை மந்திரி ஆதித்யா தாக்கரே கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

பேஸ்புக்கில் முதல்-மந்திரி உத்தவ்தாக்கரே பேசியதில் தனக்கு கண்ணீர் வந்தது. பதவிக்காக அரசியலில் துரோகம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது. பதவி இன்றைக்கு போகும், நாளை வரும். நண்பர்கள் துரோகம் செய்தால் தாங்கி கொள்ளலாம். ஆனால் ஏக்நாத் ஷிண்டேவிற்கு மந்திரி பதவி கொடுத்து குடும்ப உறுப்பினராக நன்றாக பழகி இறுதியில் துரோகம் செய்து விட்டார்.

25 ஆண்டாக எதிரியாக இருந்த எதிர்கட்சியினரான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியினர் தற்போது நண்பர்களாக இணைந்து மாநில அரசை வழிநடத்தி வருகிறோம். கடந்த 2½ ஆண்டாக மாநில முதல்-மந்திரி உத்தவ்தாக்கரே கடும் உழைப்பை வழங்கி உள்ளார். கொரோனா காலத்திலும், கட்சியை பார்க்காமல் அனைத்து மக்களுக்கும் உதவிகளை செய்ததை யாரும் மறுக்க முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News