இந்தியா
ராஜ்நாத்சிங், பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் தலைமையால், இந்தியாவை பற்றிய உலகின் பார்வை மாறியுள்ளது- ராஜ்நாத்சிங்

Update: 2022-05-26 23:42 GMT
அமெரிக்கா போன்ற பெரிய நாடு இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் அளவுக்கு ஒரு பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
உத்தர கன்னடா:

கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள கடற்படை தளத்திற்கு வருகை தந்த மத்திய மந்திரி ராஜ்நாத்சிங்,
இந்திய கடற்படை வீரர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது அவர் பேசியதாவது :

உலகில் இந்தியா பற்றிய கருத்து மாறி வருகிறது. முன்பு இந்தியாவை சர்வதேச அரங்கில் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இன்று உலகம் இந்தியாவின் பேச்சைக் கேட்கிறது. அதற்கு உங்களது பங்களிப்பும், நமது பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையும்தான் காரணம்.

இது ஒரு சிறிய சாதனை அல்ல, அமெரிக்கா போன்ற ஒரு பெரிய நாடு இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் அளவுக்கு  ஒரு பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.

நமது பாதுகாப்பு படைகள் மீது தேசம் மரியாதை வைத்துள்ளது. அவர்கள் தற்போது பாதுகாப்பான கரங்களில் இருப்பதாக திருப்தி அடைகின்றனர்.

சீனா ராணுவத்தினர் அத்துமீறிய போது இந்திய ராணுவ வீரர்கள் கொடுத்த பதிலடியால் ஒவ்வொரு இந்தியரும் தலைமை நிமித்து நிற்கின்றனர். இந்த நாடு பாதுகாப்பாக இருப்பதற்கு  நீங்கள் தான் காரணம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Tags:    

Similar News