இந்தியா
மம்தா பானர்ஜி

பா.ஜ.க. ஆட்சி ஹிட்லர் ஆட்சியைவிட மோசமானது - மம்தா பானர்ஜி தாக்கு

Update: 2022-05-23 20:34 GMT
பிரதமர் மோடி அரசு மக்கள் விரோத கொள்கைகளைக் கடைப்பிடித்து வருகிறது என மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
கொல்கத்தா:

மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மத்தியில் ஆளும் அரசு விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்தி மாநிலங்களின் விவகாரங்களில் தலையிட்டு வருகிறது.

பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியானது நாட்டின் கூட்டாட்சி அமைப்பை சிதைத்து வருகிறது.

ஹிட்லர், ஜோசப் ஸ்டாலின் மற்றும் பெனிடோ முசோலினி ஆட்சியைக் காட்டிலும் பா.ஜ.க.வின் ஆட்சி மோசமானது.

விசாரணை அமைப்புகளுக்கு தன்னாட்சி அதிகாரம் கொடுக்க வேண்டும். எந்த அரசியல் தலையீடும் இன்றி விசாரணை முகமைகள் செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News