இந்தியா
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு- மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Update: 2022-05-21 13:34 GMT
பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.50ம், டீசல் லிட்டருக்கு ரூ.7ம் விலை குறையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.50-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 குறைத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

பெட்ரோல் மீதான மத்தியகலால் வரி லிட்டருக்கு ரூ.8ம், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.6ம் குறைக்கப்படுகிறது. இதன் எதிரொலியால், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.50ம், டீசல் லிட்டருக்கு ரூ.7ம் விலை குறையும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்.. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள்- சோனியா காந்தி, பிரியங்கா காந்தி மரியாதை
Tags:    

Similar News