இந்தியா
குமாரசாமி

ஊழல் மாநகராட்சி அல்ல, ஊழல் பாஜக: குமாரசாமி விமர்சனம்

Update: 2022-05-21 03:16 GMT
பெங்களூருவில் யாருடைய ஆட்சி காலத்தில் வளர்ச்சி ஏற்பட்டது என்பது குறித்து பகிரங்க விவாதத்திற்கு தயாராக உள்ளதாக குமாரசாமி கூறியுள்ளார்.
பெங்களூரு:

முன்னாள் முதல்-மந்திாி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தொழில் அதிபர் மோகன்தாஸ் பை, பெங்களூரு மாநகராட்சியை ஊழல் மாநகராட்சி என்று விமர்சித்துள்ளார். அவர் அதற்கு பதிலாக ஊழல் பா.ஜனதா என்று கூற வேண்டும். காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சியில் நான் முதல்-மந்திரியாக இருந்தேன்.

ஆனால் ஒரு அதிகாரியை கூட பணி இடமாற்றம் செய்ய காங்கிரஸ் விடவில்லை. இதுபற்றி துணை முதல்-மந்திரியாக இருந்த பரமேஸ்வரிடம் போய் கேளுங்கள். இதற்கு சித்தராமையாவே காரணம். அதனால் அவர் என்னை விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

பெங்களூருவில் யாருடைய ஆட்சி காலத்தில் வளர்ச்சி ஏற்பட்டது என்பது குறித்து பகிரங்க விவாதத்திற்கு நான் தயாராக உள்ளேன். சித்தராமையா தயாரா?. பசவராஜ் பொம்மை, தொழில் முதலீட்டாளர்களை அழைக்க சுவிட்சர்லாந்து நாட்டிற்கு செல்கிறார். பெங்களூருவில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும்போது முதலீட்டாளர்கள் இங்கு வருவார்களா?.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.
Tags:    

Similar News