இந்தியா
பாலியல் தொல்லை

ஆந்திராவில் 15 வயது சிறுமியை மிரட்டி ஒரு ஆண்டாக பாலியல் பலாத்காரம்- 4 வாலிபர்கள் கைது

Update: 2022-05-20 05:21 GMT
ஆந்திராவில் மாடு மேய்த்த கொண்டிருந்த 15 வயது சிறுமியை மிரட்டி ஒரு ஆண்டாக பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:

ஆந்திர மாநிலம் சத்தியசாயி மாவட்டம் தளுபுலா அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சிறுமி வயலில் மாடு மேய்த்துக் கொண்டு இருந்தார்.

அதே பகுதியை சேர்ந்தவர் குமார். மாடு மேய்த்து கொண்டு இருந்த சிறுமியை குமார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அவரது நண்பர் சந்திரபாபுவுக்கு தெரிவித்துள்ளார்.

சிறுமியிடம் சென்ற சந்திரபாபு பலாத்காரம் குறித்து ஊரில் தெரிவித்து விடுவதாக மிரட்டி அவரும் சிறுமியை பலாத்காரம் செய்தார். இவருடைய நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த நரேந்திரா, சுரேஷுக்கு சிறுமியை பலாத்காரம் செய்த விஷயத்தை கூறியுள்ளார். அவர்களும் சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர்.கடந்த ஓராண்டாக 4 பேரும் பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.

அவர்கள் சிறுமியை தொடர்ந்து பயமுறுத்தி பலாத்காரத்தில் ஈடுபட்டதால் விரக்தி அடைந்த சிறுமி இதுகுறித்து தாளுபுலா போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் சரத் சந்திரா 4 பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News