இந்தியா
விபத்து பலி

சவுதிஅரேபியாவில் ஓட்டகம் மீது கார் மோதி கேரள தொழிலாளி பலி

Update: 2022-05-20 04:54 GMT
சவுதிஅரேபியாவில் ஓட்டகம் மீது கார் மோதி கேரள தொழிலாளி பலியானார். இதையடுத்து அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும் என்று உறவினர்கள் கேட்டுக்கொண்டனர்.

திருவனந்தபுரம்:

சவுதிஅரேபியாவில் கேரளாவைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளிகள் வேலை பார்த்து வருகிறார்கள்.

திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த வினோஜ் கில்பர்ட் ஜாண் (வயது42) என்பவர் சவுதிஅரேபியாவில் உள்ள ஒரு ரொட்டி தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று தொழில் நிமித்தமாக இவர் காரில் சென்றார். பாலைவன சாலையில் சென்ற போது அங்கு ஏராளமான ஓட்டகங்கள் சென்றன.

வினோஜ் கில்பர்ட் ஜாண் சென்ற கார் எதிர்பாராத விதமாக ஓட்டகங்கள் மீது மோதியது. இதில் கார் நிலைதடுமாறி கவிழ்ந்தது. காரில் இருந்த வினோஜ் கில்பர்ட் ஜாண் தலையில் பலத்த அடிப்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே வினோஜ் கில்பர்ட் ஜாண் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த தகவல் வினோஜ் கில்பர்ட் ஜானுடன் வேலை பார்த்தவர்கள் உறவினர்களுக்கு தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும் என்று உறவினர்கள் கேட்டுக்கொண்டனர்.

இந்திய தூதரகம் மூலம் இதற்கான ஏற்பாடுகளை வினோஜ் கில்பர்ட் ஜாண் நண்பர்கள் மேற்கொண்டு உள்ளனர்.

Tags:    

Similar News