இந்தியா
பாஜக எம்எல்ஏவை முதுகில் சுமந்து செல்லும் மீட்பு பணியாளர்

வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தபோது மீட்புப் பணியாளரின் முதுகில் ஏறிச் சென்ற பாஜக எம்எல்ஏ

Update: 2022-05-19 13:10 GMT
அசாமின் ஹோஜாய் மற்றும் கச்சார் மாவட்டங்களில் மழையால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கவுகாத்தி:

பருவமழைக்கு முந்தைய கனமழையால் அசாமில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அசாம் மாநிலத்தில் 27 மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஒன்பது பேர் இறந்துள்ளனர் மற்றும் 6.6 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளப்பெருக்கு காரணமாக, 48 ஆயிரம் மக்கள் 248 நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

அதுமட்டுமல்லாமல், ஹோஜாய் மற்றும் கச்சார் மாவட்டங்களில் மழையின் பாதிப்பு அதிகமாகவே உள்ளது. இந்த மாவட்டங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது நடைபெற்று வரும் மீட்புப் பணிகளின் மூலம் ஹோஜாய் மாவட்டத்தில் சிக்கியிருந்த 2,000-க்கும் மேற்பட்ட மக்களை ராணுவத்தினர் மீட்டுள்ளனர்.  திமாஹசாவில் மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக ரெயில் பாதை மற்றும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.


இந்நிலையில், லும்டிங் தொகுதி பாஜக எம்எல்ஏ சிபு மிஸ்ரா, ஹோஜாய் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். அப்போது, கணுக்கால் அளவிலான நீரில் மீட்புப் பணியாளர் ஒருவரின் முதுகில் ஏறி படகிற்கு சென்றுள்ளார். 

இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி உள்ளது. இதனால், பலரும் இவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
Tags:    

Similar News