இந்தியா
சுப்ரியா சுலே

பெண்ணை அடிக்கும் ஆணின் கையை உடைப்பேன்- மகாராஷ்டிரா எம்.பி. ஆவேசம்

Published On 2022-05-17 21:56 GMT   |   Update On 2022-05-17 21:56 GMT
எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் பெண் தொண்டர் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தினர்.
ம்பை:

அண்மையில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானியின் புனே பயணத்தின் போது, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது  தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் தொண்டர் மீது பாஜகவை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின மகளும், பாராளுமன்ற உறுப்பினருமான  சுப்ரியா சுலே, ஜல்கான் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார். 

இனிமேல் மகாராஷ்டிராவில் ஒரு பெண்ணை அடிக்க யாரேனும் கை ஓங்கினால், நானே அங்கு சென்று அவர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வேன். அவரது கையை உடைத்து அவரிடம் ஒப்படைப்பேன். இவ்வாறு  சுப்ரியா சுலே பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஒரு ஆண் ஒரு பெண்ணைத் தாக்குவது மராத்தி கலாச்சாரத்திற்கு எதிரானது என்றும், இந்த மாநிலத்தை சேர்ந்த ஷாஹு மகாராஜ்,  பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் சத்ரபதி சிவாஜி மன்னர் ஆகியோர் பெண்களை மதித்தனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News