இந்தியா
டெல்லியில் தீ விபத்து

டெல்லி அசோக் விகார் விருந்தினர் மண்டபத்தில் தீ விபத்து

Update: 2022-05-17 16:35 GMT
தீயை அணைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடமேற்கு டெல்லியின் அசோக் விகார் பகுதிக்கு அருகில் உள்ள விருந்தினர் மண்டபத்தில் இன்று மாலை 5.40 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்து போலீசார் மற்றும் 10 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தீ விபத்தில் சிக்கி ஒருவர் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள ஹரிஷ் சோப்ரா (30) என்கிற நபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தீ விபத்து ஏற்பட்டபோது மண்டபத்தில் எந்த நிகழ்ச்சியும் நடைபெறவில்லை என்பதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக டெல்லி தீயணைப்பு சேவை இயக்குநர் அதுல் கர்க் தெரிவித்துள்ளார்.

மேலும், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்.. ஜமைக்கா தலைநகர் கிங்ஸ்டன் சாலைக்கு அம்பேத்கர் பெயர்- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்
Tags:    

Similar News