இந்தியா
கோப்புப்படம்

லக்னோ- ஆக்ரா விரைவுச்சாலையில் பேருந்து கவிழ்ந்து 3 பேர் உயிரிழப்பு

Published On 2022-05-17 10:44 GMT   |   Update On 2022-05-17 10:44 GMT
லக்னோ - ஆக்ரா விரைவுச்சாலையில் இன்று காலை பேருந்து கவிழ்ந்து 3 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லக்னோ:

உத்தரப்பிரதேசம், லக்னோ-ஆக்ரா விரைவுச்சாலையில் இரண்டு அடுக்குகளை கொண்ட பேருந்து ஒன்று சுமார் 80 முதல் 85 பயணிகளை ஏற்றிக் கொண்டு பீகாரில் இருந்து ஜெய்பூருக்கு சென்று கொண்டிருந்தது.
 
அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் காலை தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ஒருவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

படுகாயம் அடைந்த 25 பேரில் சிலர் கான்பூர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் பங்கர்மாவில் சமுக சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறிய காயங்களுடன் உயிர் பிழைத்த 55 பயணிகள் முதலுதவி கொடுக்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் .

இந்நிலையில், உயிரிழந்த மூன்று பேரில் ஒருவர் 35 வயதான ராகேஷ் தாக்கூர். இவர், பீகார், சுவான் மாவட்டத்தில் வசித்து வந்தவர். மீதி இருவரின் அடையாளங்களை கண்டறியும் முயற்சி நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News