இந்தியா
கேரளாவில் பாறையில் ஏறி செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர் கடல் அலையில் சிக்கி பலி

கேரளாவில் பாறையில் ஏறி செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர் கடல் அலையில் சிக்கி பலி

Update: 2022-05-16 04:53 GMT
கேரளாவில் பாறையில் ஏறி வீடியோ எடுத்த வாலிபர் கடல் அலையில் சிக்கி பலியான சம்பவம் நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் விழிஞ்சம் பகுதியில் புளிங்குடி ஆழிமலை சிவன் கோவில் உள்ளது. இங்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடல் பகுதி பாறைகளில் ஏறி நின்று செல்போனில் படம் பிடிப்பது வழக்கம்.

நேற்று மாலை புனலூரைச் சேர்ந்த சுகுமாரன் மகன் ஜோதிஷ் (வயது 25) தனது நண்பர்கள் மற்றும் யாத்திரைக் குழுவுடன் ஆழிமலை கோவிலுக்கு வந்தார். நண்பர்கள் வினீத், அபிலாஷ், சுமேஷ் மற்றும் உன்னி ஆகியோருடன் கடல் அருகில் உள்ள பாறையில் ஏறிய ஜோதிஷ் ஆல்பம் ஒன்றை உருவாக்குவதற்காக தங்கள் மொபைல் போனில் வீடியோ எடுக்க ஆரம்பித்தார்.

வீடியோவை படமாக்கி கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பெரிய அலை வந்து ஜோதி ஷை கடலுக்குள் இழுத்து சென்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் ஜோதிசை மீட்க முயன்றனர். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. இதையடுத்து விழிஞ்சம் கடலுார் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சோதனை நடத்தினர். சுமார் ஒரு மணி நேர தேடுதலுக்கு பிறகு ஜோதிஷ் உடல் மீட்கப்பட்டது. பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Tags:    

Similar News