இந்தியா
கோப்புப்படம்

வீடு புகுந்து மாற்றுத்திறனாளி இளம்பெண் பாலியல் பலாத்காரம்- கட்டிட மேஸ்திரி கைது

Update: 2022-05-16 03:56 GMT
ஆந்தி மாநிலம் குண்டூர் அருகே வீடு புகுந்து மாற்றுத்திறனாளி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட மேஸ்திரியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் குண்டூர் அடுத்த தெனாலி பகுதியை சேர்ந்தவர் 20 வயதுடைய காது கேளாத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி இளம்பெண். இவரது பெற்றோர் கூலி வேலை செய்து வருகின்றனர்.

பக்கத்து வீட்டை சேர்ந்தவர் சர்க்கரையா (வயது 27). கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இளம்பெண்ணின் பெற்றோர் வழக்கம்போல் கூலி வேலைக்கு சென்றதால் வீட்டில் இளம்பெண் மட்டும் தனியாக இருந்தார். இதனை அறிந்த சர்க்கரையா நேற்று மதியம் இளம்பெண் வீட்டிற்குச் சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

வேலை முடிந்து இளம்பெண்ணின் பெற்றோர் மாலை வீடு திரும்பினர். அப்போது இளம்பெண் ஆடைகள் கிழிந்த நிலையில் அழுதபடி இருந்தார். இதனைக் கண்டு திடுக்கிட்ட அவரது பெற்றோர் இளம்பெண்ணிடம் விசாரித்தனர். இளம்பெண் தனக்கு நடந்த கொடுமையை சைகை மூலம் தெரிவித்தார்.

இதையடுத்து தெனாலி மகளிர் போலீசில் அவரது பெற்றோர் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சர்க்கரைய்யாவை போக்சோவில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News