இந்தியா
நீட்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு

Published On 2022-05-16 03:52 GMT   |   Update On 2022-05-16 07:57 GMT
தற்போது வரை நீட் தேர்வுக்கு 20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
புது டெல்லி:

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நீட் தோ்வு மூலம் நடைபெற்று வருகிறது. 

2022-23-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான நீட் தோ்வு வரும் ஜூலை 17-ஆம் தேதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. நீட் தோ்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிப்பது கடந்த ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

மே மாதம் 6-ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மே 15ஆம் தேதி வரை விண்ணப்ப தேதி நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றுடன் விண்ணப்பிக்கும் தேதி முடிவடைய இருந்த நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மே 20ஆம் தேதி இரவு 9 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை நீட் தேர்வுக்கு 20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் www.neet.nta.nic.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.
Tags:    

Similar News