இந்தியா
அரவிந்த் கெஜ்ரிவால்

மூத்த குடிமக்களுக்கு ஏசி ரெயிலில் இலவச புனித பயணம் - குஜராத்தில் கெஜ்ரிவால் வாக்குறுதி

Published On 2022-05-12 01:01 GMT   |   Update On 2022-05-12 01:01 GMT
தலைநகர் டெல்லியைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சி அடுத்து குஜராத்தில் களம் காண திட்டமிட்டுள்ளது.
அகமதாபாத்:

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பஞ்சாப்பில் காங்கிரசை வீழ்த்தி ஆம் ஆத்மி அரசு ஆட்சியை பிடித்தது. இதையடுத்து மின் கட்டண சலுகை, வீடுகளுக்கே சென்று ரேசன் பொருட்கள் வழங்குதல் உள்ளிட்ட பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

குஜராத்தில் முதல்-மந்திரி புபேந்திர பட்டேல் தலைமையிலான பா.ஜ.க. அரசு நடந்து வருகிறது. 3 தசாப்தங்களாக அக்கட்சி குஜராத்தில் ஆட்சியில் நீடித்து வருகிறது. நடப்பு ஆண்டின் இறுதியில் சட்டசபைத் தேர்தலை குஜராத் சந்திக்கிறது.

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான கெஜ்ரிவால் நேற்று ராஜ்கோட் நகரில் பேரணி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் 60 வயது மேற்பட்டோருக்கு அயோத்தி உள்பட பல்வேறு புனித தலங்களுக்கு ஏசி ரெயில்களில் இலவசமாக அழைத்துச் செல்லப்படுவார்கள். 

இலவச மின்சாரம், தரம் நிறைந்த பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News