இந்தியா
என்கவுண்டர்

ஜம்மு காஷ்மீர் - பந்திப்போரா என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை

Update: 2022-05-11 18:45 GMT
ஜம்மு காஷ்மீர் பகுதியில் தொடர்ந்து பாதுகாப்புப் படைக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு சென்ற பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த என்கவுண்டரில் குல்சார் அகமது என்ற பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். அவனிடமிருந்து வெடிமருந்து, ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News