இந்தியா
கோப்புப்படம்

ஆயுதங்களை ஏந்தி வீடுகளுக்குள் புகுந்து மக்களை மிரட்டிய 5 பேர் கைது

Published On 2022-05-07 10:46 GMT   |   Update On 2022-05-07 14:17 GMT
இந்த செயலுக்கான நோக்கம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள தஹிசர் மோரி மற்றும் தாகூர்பாடா கிராமங்களில் வசிப்பவர்களை வாள், கோடாரி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி பயமுறுத்தியதாக ஒரு பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து ஷில் டைகர் காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.15 மணி முதல் 3.45 மணி வரை, குற்றம்சாட்டப்பட்டவர்கள் தங்கள் கைகளில் வாள்கள், கோடாரிகளை ஏந்தியவாறு இந்த பகுதிகளில் சுற்றிச் வந்து உள்ளூர்வாசிகளை பயமுறுத்தியுள்ளனர்.

அவர்கள் அங்குள்ள வீடுகளின் கதவுகளை தட்டி நுழைந்து, சரியான காரணமின்றி குடியிருப்புவாசிகளை அச்சுறுத்தினர். இதனால், மக்கள் மத்தியில் பீதி பரவியது.

பின்னர் உள்ளூர் வாசிகள் சிலர் அந்த நபர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.

குற்றம்சாட்டப்பட்ட ஜாவேத் சலீம் ஷேக், திலாவர் ஃபரித் ஷேக், சாஹித் நசீர் ஷேக், சாத் அகமது மற்றும் மரியா ஜாவேத் கான் ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கும்பலில் மேலும் சிலர் இருந்ததாகவும், அவர்கள் தலைமறைவானதும் தெரியவந்ததை அடுத்து, அவர்களைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். மேலும், இந்த செயலுக்கான நோக்கம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்.. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு - ஆயிரத்தை தாண்டியதால் மக்கள் அதிர்ச்சி
Tags:    

Similar News