இந்தியா
ராகுல் காந்தி

எல்.ஐ.சி.யை குறைத்து மதிப்பிடுவதா? மோடி அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Published On 2022-05-05 17:24 GMT   |   Update On 2022-05-05 17:24 GMT
எல்.ஐ.சி.யின் ஒரு பங்கின் விலை ரூ.902 முதல் ரூ.949 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மே 9-ம் தேதி வரை பங்கு விற்பனை நடைபெற உள்ளது.
புதுடெல்லி:

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யின் 3.5 சதவீத பங்குகளை விற்பனை செய்து அதன்மூலம் 21,000 கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு திட்டமிட்டு, அதன்படி பங்கு விற்பனை தொடங்கி உள்ளது. எல்.ஐ.சி.யின் ஒரு பங்கின் விலை ரூ.902 முதல் ரூ.949 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மே 9-ம் தேதி வரை பங்கு விற்பனை நடைபெற உள்ளது.

இந்நிலையில், காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியை மோடி அரசு குறைத்து மதிப்பிடுவதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 

‘13.94 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, 30 கோடி பாலிசிதாரர்கள், ரூ.39 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துக்கள், முதலீட்டின் மீது வருவாய் தரும் நம்பர்-1 நிறுவனம். இருப்பினும், மோடி அரசு எல்.ஐ.சி.யைக் குறைத்து மதிப்பிட்டுள்ளது. இந்தியாவின் மதிப்புமிக்க சொத்துக்களில் ஒன்று ஏன் மிகவும் குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது?’ என்று ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார். 
Tags:    

Similar News