இந்தியா
ஒமைக்ரான் எக்ஸ்.இ

இந்தியாவில் ஒருவருக்கு ஒமைக்ரான் எக்ஸ்.இ. வகை தொற்று

Published On 2022-05-04 02:03 GMT   |   Update On 2022-05-04 02:03 GMT
தற்போது நாட்டில் 12 மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து, முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் எக்ஸ்.இ. வகை தொற்று முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி :

கொரோனா ஒமைக்ரான் வைரசின் எக்ஸ்.இ. துணை வகை மராட்டியம், குஜராத் மாநிலங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடந்த சில வாரங்களாக தகவல்கள் உலா வந்தன.

இந்நிலையில் இந்தியாவில் முதல் முறையாக ஒருவருக்கு எக்ஸ்.இ. தொற்று ஏற்பட்டுள்ளதாக கொரோனா மரபணு வகைப்பாட்டு கூட்டமைப்பான ‘இன்சாகோக்’ நேற்று உறுதி செய்துள்ளது.

தனது புதிய தகவல் அறிக்கையில் இதை தெரிவித்துள்ள ‘இன்சாகோக்’, எங்கிருந்து பெற்ற மாதிரியில் இந்த ஒமைக்ரான் வகை உறுதி செய்யப்பட்டது என்று தெரிவிக்கவில்லை.

தற்போது நாட்டில் 12 மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து, முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் எக்ஸ்.இ. வகை தொற்று முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News