இந்தியா
தேசிய புலனாய்வு அமைப்பை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா திறந்து வைத்தார்

பயங்கரவாத நடவடிக்கைகளை கண்காணிக்க தேசிய தரவுத் தளம் விரைவில் உருவாக்கப்படும்- மத்திய உள்துறை மந்திரி தகவல்

Published On 2022-05-03 18:27 GMT   |   Update On 2022-05-03 18:27 GMT
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்ற நாளிலிருந்தே பயங்கரவாதத்திற்கு எதிராக எந்த சமரச கொள்கையையும் கொண்டிருக்கவில்லை என மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
பெங்களூரு:

பெங்களூருவில் தேசிய புலனாய்வு அமைப்பை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு துறை மந்திரி அமித் ஷா திறந்து வைத்தார்

விழாவில் அவர் பேசுகையில்:

முந்தைய பாதுகாப்பு சவால்களுடன் ஒப்பிடுகையில், இன்று பாதுகாப்புத் தேவைகள் கணிசமாக மாறியுள்ளன.

தரவு சேகரிப்பு நிறுவனங்களிடமிருந்து தகவல்களை அணுகுவதற்கான அதி நவீன மற்றும் புதுமையான தகவல் தொழில்நுட்ப தளத்தை உருவாக்கி செயல்படுத்தும் பணியை தேசிய புலனாய்வு அமைப்பிடம் மத்திய அரசு ஒப்படைத்துள்ளது.

தேசிய புலனாய்வு அமைப்பு பயங்கரவாதிகளுக்கும், அவர்களுக்கு ஆதரவளிப்போருக்கும் எதிரான நமது போரில் துணையாக நிற்கும்.

சரியான நோக்கங்களுக்காக மட்டுமே இந்த அமைப்பு பயன்படுத்தப்பட வேண்டும் எனவும், எந்த நேரத்திலும், அங்கீகாரம் இல்லாமல், தனிமனித தரவுகள் குறித்து அணுக வேண்டாம்

ஹவாலா பரிவர்த்தனைகள், பயங்கரவாதிகளுக்கு செல்லும் நிதி, கள்ளநோட்டு, போதைப்பொருள், வெடிகுண்டு மிரட்டல்கள், சட்டவிரோத ஆயுதக் கடத்தல் மற்றும் பிற பயங்கரவாத நடவடிக்கைகளை கண்காணிக்க மத்திய அரசு விரைவில் தேசிய தரவுத்தளத்தை உருவாக்கும்.

பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு பதவியேற்ற முதல் நாளிலிருந்தே பயங்கரவாதத்திற்கு எதிராக எந்த சமரச கொள்கையை கொண்டிருக்கவில்லை. 

பிரதமர் மோடி அறிவித்த காவல் தொழில்நுட்ப இயக்கம் விரைவில் நடக்க உள்ள காவல்துறை தலைமை இயக்குனர் மாநாட்டில் தொடங்கி வைக்கப்படும்.

நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் பசவராஜ பொம்மை, கர்நாடக உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா, மத்திய உள்துறை இணை அமைச்சர் நிசித் பிரமானிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News