இந்தியா
மம்தா பானர்ஜி

இந்தியாவில் தனித்துவிடப்படும் அரசியல் வரவேற்கத்தக்கது அல்ல- மம்தா பானர்ஜி

Published On 2022-05-03 05:10 GMT   |   Update On 2022-05-03 05:10 GMT
ராம்ஜான் பிரார்த்தனைக்கு பிறகு நடைபெற்ற விழாவில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி உரையாற்றினார்.
கொல்கத்தா:

இன்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டார். 14,000 இஸ்லாமியர்கள் பங்கேற்ற விழாவில் பேசிய அவர் கூறியதாவது:-

இந்தியாவில் தற்போது உள்ள அரசியல் சூழல் சரியானதல்ல. சிலர் முன்னெடுக்கும் அரசியல் மக்களின் ஒரு சாரரை (இஸ்லாமியர்களை) தனித்து விடுகிறது. இது வரவேற்கத்தகது அல்ல. நமது நாட்டில் தற்போது பிரித்தாளும் சூழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதற்காக அச்சம் கொள்ள வேண்டாம். தொடர்ந்து போராடுங்கள். நானோ, எனது அரசோ நீங்கள் வருந்தத்தக்க வகையில் நடந்துகொள்ளாது.

இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.
Tags:    

Similar News