இந்தியா
மலைப்பாம்பு

திருப்பதி மலைப்பாதையில் ஊர்ந்து சென்ற 10 அடி நீள மலைப்பாம்பு- நடுரோட்டில் வாகனங்கள் நிறுத்தம்

Published On 2022-05-03 05:05 GMT   |   Update On 2022-05-03 05:05 GMT
வனப்பகுதியில் இருந்து யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி மலைப்பாதைக்கு வருவதுண்டு.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர். வேன், கார், பஸ் மூலம் திருப்பதி வருபவர்கள் அலிபிரியில் இருந்து மலைப்பாதை வழியாக திருமலைக்கு வந்து தரிசனம் செய்கின்றனர். திருமலைக்கு செல்லும் மலைப்பாதை அடர்ந்த வனப்பகுதி என்பதால் யானை, சிறுத்தை, மான், பாம்பு உள்ளிட்டவை வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

வனப்பகுதியில் இருந்து யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி மலைப்பாதைக்கு வருவதுண்டு. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலை பாதையில் பைக்கில் திருமலைக்குச் சென்று கொண்டிருந்த தேவஸ்தான ஊழியர்கள் மீது சிறுத்தை ஒன்று திடீரென பாய்ந்து தாக்கியது. அப்போது அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் ஆரன் அடித்ததால் சிறுத்தை வனப்பகுதிக்குள் தப்பி ஓடியது.

யானைகளும் மலை பாதைக்கு வருவதால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் திருமலையிலிருந்து திருப்பதிக்கு வாகனங்கள் வந்து கொண்டு இருந்தன. 7வது மைல் கல்லில் 10 அடி நீள மலைப்பாம்பு ஒன்று மலைப் பாதையின் குறுக்காக மெதுவாக ஊர்ந்து சென்றது. இதனை கண்ட வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தினர். இதனால் மலைப்பாதையில் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது. பாம்பு வனப்பகுதிக்குள் சென்றதும் வாகனங்கள் சென்றன.

Tags:    

Similar News