இந்தியா
திருப்பதி

திருப்பதியில் பக்தர்கள் வசதிக்காக பிரம்மாண்ட தியான மண்டபம்

Update: 2022-04-30 04:31 GMT
வெங்கமாம்பாவுக்காக பிருந்துதாவனத்தில் 1.5 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட தியான மண்டபம் கட்டப்பட உள்ளது. புதிதாக கட்டப்படும் தியான மண்டபத்தில் 350 பக்தர்கள் அமர்ந்து தியானம் செய்யலாம்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அந்தக் காலத்தில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கியவர் வெங்கமாம்பா. அவர், திருமலையில் முக்தி அடைந்தார். அவருக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒரு பிருந்தாவனத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பதிக்கு வரும் பக்தர்களில் பலர் வெங்கமாம்பா பிருந்தாவனத்துக்கு வந்து தியானம் செய்கின்றனர். இந்த நிலையில் வெங்கமாம்பா பிருந்தாவனத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பாக தியான மண்டபம் கட்டப்பட உள்ளது. அதற்கான கட்டிட பணி பூமி பூஜையுடன் நேற்று தொடங்கியது. தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி பங்கேற்று பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.

திருப்பதியில் முதன்முதலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நடைமுறையை வெங்கமாம்பா தான் தொடங்கி வைத்தார். அவர் செய்த பணி இன்று வரை தொடர்கிறது. அவர் திருமலையிலேயே முக்தி அடைந்தார். வெங்கமாம்பாவுக்காக பிருந்துதாவனத்தில் 1.5 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட தியான மண்டபம் கட்டப்பட உள்ளது.

புதிதாக கட்டப்படும் தியான மண்டபத்தில் 350 பக்தர்கள் அமர்ந்து தியானம் செய்யலாம் என்றனர். விழாவில் தேவஸ்தான கூடுதல் அதிகாரி ஏ.வி.தர்மா ரெட்டி, இணை அதிகாரிகள் சதாபார்கவி, வீரபிரம்மன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

திருமலையில் உள்ள வெங்கமாம்பா பிருந்தாவனத்தில் தியான மண்டபம் கட்ட அயோத்திராமி ரெட்டி எம்.பி. ரூ.5 கோடி காணிக்கையாக வழங்கி உள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ரூ.65.725 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 30,346 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.4.54 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

Tags:    

Similar News