இந்தியா
நடிகர் திலீப்

நடிகை பாலியல் பலாத்கார வழக்கு - நடிகர் திலீப் கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம்

Published On 2022-04-19 09:19 GMT   |   Update On 2022-04-19 09:19 GMT
செல்போனில் இருந்த சில ஆதாரங்களை நடிகர் திலீப் அழித்துவிட்டதாக போலீசார் குற்றம் சாட்டி, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:

கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஓடும் காரில் பிரபல நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுதலையான திலீப் மீது விசாரணை அதிகாரிகளை மிரட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இதற்கிடையே, நடிகர் திலீப் மற்றும் அவரது உறவினர்கள் பயன்படுத்திய செல்போன்களை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். செல்போனில் இருந்த சில ஆதாரங்களை திலீப் அழித்துவிட்டதாக போலீசார் குற்றம் சாட்டினர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், விசாரணை அதிகாரிகளை மிரட்டிய விவகாரத்தில் தன் மீதான வழக்கை ரத்துசெய்ய கோரி நடிகர் திலீப் தாக்கல் செய்த மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையையும் உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

மேலும், நடிகை துன்புறுத்தப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரிகளை கொல்ல சதி நடந்தது குறித்து தொடர்ந்து விசாரிக்கவும் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Tags:    

Similar News