இந்தியா
காசி விஸ்வநாதர் கோவிலில் வெங்கையா நாயுடு வழிபாடு

காசி விஸ்வநாதர் கோவிலில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வழிபாடு

Update: 2022-04-16 20:16 GMT
கோவில் வளாகத்தில் உள்ள பாரத மாதாவின் உருவச்சிலைக்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பயணம் மேற்கொண்ட குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு,  ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்தில் தமது மனைவியுடன் வழிபாடு மேற்கொண்டார். புதிதாக கட்டப்பட்டுள்ள கோயில் வளாகத்தை பார்வையிட்ட அவர், அதிகாரிகளிடம் திட்டம் குறித்து கேட்டறிந்தார்.

கோவில் வளாகத்தில் உள்ள பாரத மாதாவின் உருவச்சிலைக்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், பிரசித்தி பெற்ற கால பைரவர் கோவிலில் பூஜை மற்றும் ஆரத்தி நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் கலந்து கொண்டார்.  

அங்குள்ள பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் நினைவு மண்டபத்திற்கு சென்ற குடியரசுத் துணைத் தலைவர்,  தீன்தயாள் வாழ்க்கைப் பயணத்தை சித்தரிக்கும் முப்பரிமாண காணொலி காட்சியை பார்வையிட்டார். 

தொடர்ந்து கங்கை கரையில் நடைபெற்ற கங்கா ஆரத்தி  நிகழ்ச்சியிலும் குடியரசுத் துணைத் தலைவர் தமது மனைவியுடன் கலந்து கொண்டார்.
Tags:    

Similar News