இந்தியா
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

அம்பேத்கரின் 132வது பிறந்தநாள்- குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை

Published On 2022-04-14 04:46 GMT   |   Update On 2022-04-14 04:46 GMT
அம்பேத்கரின் 132வது பிறந்தநாளையொட்டி டெல்லி பாராளுமன்றத்தில் உள்ள அவரது சிலைக்கு சபாநாயகர், மத்திய அமைச்சர்களும் மரியாதை செலுத்தினர்.
அம்பேத்கரின் 132வது பிறந்தநாளையொட்டி டெல்லி பாராளுமன்றத்தில் உள்ள அவரது சிலைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர். இவர்களை தவிர சபாநாயகர், மத்திய அமைச்சர்களும் மரியாதை செலுத்தினர்.

பின்னர் அம்பேத்கருக்கு தனது டுவிட்டர் பக்கத்தின் மூலம் குடியரசுத் தலைவரும், பிரதமரும் புகழஞ்சலி பதிவிட்டனர்.

இதுகுறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறிப்பிடுகையில், பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்தநாளான்று அவர்களுக்கு பணிவான அஞ்சலி செலுத்துகிறேன். சமூக நீதியின் வலுவான வக்கீல். பாபாசாகேப் ஒரு அரசியலமைப்பு சிற்பியாக நவீன இந்தியாவின் அடித்தளத்தை அமைத்தார். முதலில் இந்தியன், இந்தியன் பின், இந்தியன் கடைசி என்ற அவரது லட்சியத்தைப் பின்பற்றி அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்குவதில் நம் பங்கைச் செய்வோம் என்று பதிவிட்டிருந்தார்.



தொடர்ந்து, பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் ஜெயந்தி அன்று அவருக்கு அஞ்சலிகள். இந்தியாவின் முன்னேற்றத்திற்கு அவர் அழியாத பங்களிப்பைச் செய்துள்ளார். நமது தேசத்திற்கான அவரது கனவுகளை நிறைவேற்றுவதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் நாள் இது என்று குறிப்பட்டிருந்தார்.

இதையும் படியுங்கள்.. மகாராஷ்டிராவில் அதிர்ச்சி - மானிட்டர் பல்லியை பலாத்காரம் செய்த 4 பேர் கைது
Tags:    

Similar News