இந்தியா
ரோஜா

நடிகை ரோஜாவின் அரசியல் பயணம்

Published On 2022-04-11 08:41 GMT   |   Update On 2022-04-11 08:41 GMT
2019-ல் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வரானபோது ரோஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவருக்கு ஆந்திர மாநில தொழிற்சாலைகள் உட்கட்டமைப்பு பிரிவு தலைவர் என்று முக்கியப்பதவி கொடுக்கப்பட்டது.
நடிகை ரோஜா திருப்பதி அருகே பிறந்தவர். பின்னர் அவரது குடும்பம் ஐதராபாத் சென்றது. அங்கே கல்லூரி படிப்பை முடித்தார். 1991ல் தெலுங்கில் ராஜேந்திர பிரசாத்துடன் நடித்தார். தமிழில், ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் செம்பருத்தி படத்தில் அறிமுகமானார்.

ஆர்.கே.செல்வமணியை 2002ல் காதல் திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் பல வெற்றி படங்களில் நடித்தவர்.

1999ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார்.

அப்போது போட்டியிட்டு 2004-ல் நகரியிலும், 2009-ல் சந்திரகிரியில் தோல்வியடைந்தார்.

அதன்பின்னர் 2009-ம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர். காங்கிரசில் இணைந்தார். தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள நகரி தொகுதியில் போட்டியிட்டு 2 முறை எம்.எல்.ஏ. ஆனார்.

2019-ல் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வரானபோது ரோஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவருக்கு ஆந்திர மாநில தொழிற்சாலைகள் உட்கட்டமைப்பு பிரிவு தலைவர் என்று முக்கியப்பதவி கொடுக்கப்பட்டது. இப்போது அமைச்சர் ஆகியுள்ளார்.
Tags:    

Similar News